தேவகோட்டை கண்டதேவி அம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :3154 days ago
தேவகோட்டை: கண்டதேவியில் குங்குமகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுபூஜைகள் நடந்தன. இரவு மற்றும் மறுநாள் காலையில் அம்மன் வீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடந்தது. சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், ஆனித்திருவிழா வரும் 29 ந்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.