உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி கோவிலில் பாலஸ்தாபன விழா

பவானி கோவிலில் பாலஸ்தாபன விழா

பவானி: பவானி பழனியாண்டவர் கோவிலில், பாலஸ்தாபன விழா நேற்று நடந்தது. பவானி, தலைமை தபால் அலுவலகம் அருகிலுள்ள, பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்நிலையில், பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது. ஹோமம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம், பாலஸ்தாபன தாரு பிம்பத்திற்கு பூஜை தீபாராதனை நேற்று நடந்தது. அமைச்சர் கருப்பணன், கோவில் அதிகாரிகள், ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !