உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாதாதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

நாதாதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஆர்.கே.பேட்டை: ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவிலில், இன்று, ஆனி திருமஞ்சனம் நடைபெற உள்ளது. காலை முதல், சிறப்பு தீப, துாப ஆராதனைகள் தொடர்கின்றன. பள்ளிப்பட்டு - நகரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில். திருமண தலமாக விளங்குகிறது. கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி, மிகப்பெரிய திருக்குளத்துடன் கோவில் பொலிவாக தோற்றம் அளிக்கிறது. இந்த கோவிலில், இன்று, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது. காலை முதல், தீப, துாப ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !