இந்த வாரம் என்ன
ஜூலை 1: அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல், மதுரை மீனாட்சி ஊஞ்சல் உற்ஸவம்
ஜூலை 2: நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
ஜூலை 3: முகூர்த்த நாள், சென்னை திருவல்லிக்கேணி நரசிம்மர், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்றநாராயணப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல் உற்ஸவம், ராமநாதபுரம் கோதண்டராமர் தேர், அருப்புக்கோட்டை கட்டங்குடி ரெட்டிசுவாமி குருபூஜை
ஜூலை 4: ஏகாதசி விரதம், கோவர்த்தன விரதம், பெருமாளுக்கு துளசிமாலை
அணிவித்தல்
ஜூலை 5: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன் பவனி
ஜூலை 6: பிரதோஷம், மதுரை மீனாட்சி ஊஞ்சல் உற்ஸவம், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சிவன் தேர், திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதராக காட்சி
ஜூலை 7: திருநெல்வேலி நெல்லையப்பர் தேர், திருத்தணி முருகன் கிளி வாகனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.