ஆடிக்கு அழைச்சாச்சா!
ADDED :3417 days ago
ஆடி முதல் நாளில் ஆடிச்சீர் கொடுத்து, பெண்ணை தாய் வீட்டிற்கு மாப்பிள்ளையுடன் அழைத்து வருவர். ஆடி விருந்தின் போது மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப் பால் கொடுப்பர். அதன் பின் மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பி விட்டு, தாய் வீட்டில் பெண்ணைத் தங்க வைப்பர். ஆடியில் கருத்தரித்தால், சித்திரை மாத கோடையில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், குழந்தைக்கு வெயிலால் துன்பம் உண்டாகும்.