உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

எல்லையம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், எல்லையம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று திருக்கண்மாலீஸ்வரர் காவிரி கரையில் இருந்து, தீர்த்தக்குடங்களை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்து சென்றனர். டவுன் பஞ்சாயத்தின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக சென்ற பக்தர்கள், கடைசியாக கோவிலை சென்றடைந்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், மாவிளக்கு பூஜை, மகா தீபாராதணை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !