உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி தணிகாசலம்மனுக்கு வளைகாப்பு

திருத்தணி தணிகாசலம்மனுக்கு வளைகாப்பு

திருத்தணி: ஆடிப்பூரத்தையொட்டி, தணிகாசலம்மன் கோவிலில், மூலவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஆடிப்பூரத்தையொட்டி, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, திரளான பெண்கள் அம்மன் கோவிலுக்கு வந்து, புதுவளையல் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் நடத்தியும் வழிபட்டனர். மேலும், சில பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தும் வழிபட்டனர். இதே போல், திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன் கோவிலில், நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், வண்ணமலர் அலங்காரம் நடத்தப்பட்டது. அதன்பின் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !