சுப நிகழ்ச்சி தடையின்றி நடக்க....
ADDED :3134 days ago
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு அன்று, கூடுதுறை ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர். வேதநாயகி அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து வழிபாடு செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இந்த வழிபாட்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும் என்பது ஐதீகம்.