சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?
ADDED :3048 days ago
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும், கருடருடன் வராத காரணத்தால் இந்த அவதாரத்தை ‘அவசர திருக்கோலம் ‘ என்பர். நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது என்பர். துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தையும் நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச்சிறப்பு. இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.