கெட்டவனை திருத்தும் வழி
ADDED :3008 days ago
சிறு வயதில் கெட்டவர்களாக இருப்பவர்கள் காலம் முழுவதும் அப்படியே இருந்து விடுவதில்லை. கணநேரத்தில் மனம் மாறிப் போகிறவர்கள் இருக்கிறார்கள். புகை பிடிப்பவர், குடிகாரன், கொலைகாரன் கூட திருந்துகிறான். ஜெபம் செய்வதே இதற்கு காரணம். இங்கிலாந்தில் வசித்த ஜார்ஜ் முல்லர் என்ற வாலிபர் சிறு வயதில் கெட்டுத் திரிந்தார். இதனால், நிற்கக்கூட முடியாத அளவுக்கு தளர்ந்து போனார். டாக்டர்களும் கைவிட்டனர். ஒருநாள், அவர் ஜெபக்கூட்டம் ஒன்றுக்கு சென்றார். அங்கே பேசியவர், நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள், என்று, பைபிளை மேற்கோள் காட்டி பேசினார். இதன் பொருள், ஆண்டவரை மனதார வணங்குபவர்கள் கேட்கும் கோரிக்கை
நிச்சயமாக நிறைவேற்றப்படும், என்பதாகும்.
ஜார்ஜ் முல்லரை அந்த வசனம் பெரிதும் கவர்ந்தது. அவர் ஆண்டவரிடம், ஆண்டவரே! நான் இதுவரை துஷ்டனாகத் திரிந்தேன். அதன் பலனை அனுபவிக்கிறேன். இனி நீர் விதித்த சட்ட திட்டங்களை மீற மாட்டேன். என்னை குணமாக்கும்,” எனக் கண்ணீர் விட்டார். கெட்ட வழக்கங்களை கைவிட்டார். ஆண்டவரின் சிந்தனையிலேயே இருந்தார். அவரது விசுவாசம் ஆண்டவரைக் கவர்ந்தது. அவர் குணமானார். கடவுளை விசுவாசிக்கும் எல்லாருக்குமே இது கிடைக்கும்...சரியா? உயிர் விட்ட ஆட்டுக்குட்டி இயேசுநாதர் உலகிற்கு வந்த மேய்ப்பர். இவர் ஆட்டுக்குட்டிகளான மக்களை நல்வழிப்படுத்தியவர். நமக்காக பாவங்களைச் சுமந்த அவருக்கு தினமும் நன்றி சொல்ல வேண்டும். லண்டனிலுள்ள ஒரு சர்ச் வாசலில் ஆட்டுக் குட்டியின் படம் வரையப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இயேசு மேய்ப்பராக இருந்தார் என்பதற்காக அல்ல. அந்த தேவாலயம் கட்டும் போது, ஒரு தொழிலாளி மேலேயிருந்து கீழே விழுந்து விட்டார். அவர் இறந்திருப்பார் என்று கருதி சக தொழிலாளர்கள் ஓடினர். ஆனால், அவர் விழுந்ததோ கீழே படுத்திருந்த ஆட்டுக்குட்டியின் மீது. ஆனால், அந்தக்குட்டி இவரது எடையை முழுவதுமாகத் தாங்கி, தன் உயிரை விட்டிருந்தது. அந்த ஆட்டுக் குட்டியை நன்றியுடன் பார்த்த அந்த தொழிலாளி அதன் படத்தை தேவாலய சுவரில் அழகோவியமாக தீட்டி, தன் நன்றியை உறுதிப்படுத்தினார். நாமும் ஆட்டுக்குட்டிகளின் மேய்ப்பரான இயேசுவிற்கு, நம் பாவங்களைச் சுமந்ததற்காக தினமும் நன்றி சொல்ல வேண்டும்.