அம்மையப்பர் தரிசனம்!
ADDED :3059 days ago
தூத்துக்குடி: சங்கரராமேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவுற்ற மறுநாள் இங்குள்ள ஐம்பத்துக்கும் மேற்பட்ட கோயில்களைச் சேர்ந்த அம்மன்கள் அலங்கரிக்கப்பட்டு சிவன்கோயிலின் முன்பு ஒன்று கூடுவர். அப்போது சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள, அனைத்து அம்மன்களும் அம்மையப்பரை தரிசனம் செய்யும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்யும்.