உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்றும் புகழுடன் வாழ...

என்றும் புகழுடன் வாழ...

* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ என்றும் புகழுடன் வாழ்வான்.            
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாவதில்லை.           
* மனதில் அச்சம் தலை துாக்கி நிற்கும் வரை, மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும்.            
* தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சியில்  ஈடுபட தயங்குவான்.         
* போதும் என்ற மனம் படைத்தவன் திருப்தியாக வாழ்வதோடு, பிறர் நலனிலும் அக்கறை கொள்வான்.         
* பேராசை படைத்தவன்  உலகையே பரிசளித்தால் கூட திருப்தி பெற மாட்டான்.
* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை, கூட்டாளிகளுக்கும் சமபங்கு  பகிர்ந்து கொடுங்கள்.
* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவையுள்ளவனுக்கு கொடுங்கள்.
* விருப்பம் போல வாழ்நாளை  நீட்டிக்க முடியாது.  இதில் இயன்ற நல்லதைச் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !