எண்ணெய் குளியல் எத்தனை மணிக்கு?
ADDED :3097 days ago
சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால், தீபாவளியன்று மட்டும் நீராடலாம் என்ற விதி இருக்கிறது என்கிறார் காஞ்சிப் பெரியவர். சூரிய உதயத்தை அருணோதயம் என்பர். சூரியனின் தேரோட்டி அருணன். அவன் சிவப்பாக இருப்பான். அவனது வருகையின் அடையாளமாக, சூரியன் உதிக்கும் முன்பே வானில் அருண வர்ணம் (சிவப்புநிறம்) பரவும். தீபாவளியன்று அருணோதய நேரத்தில் (அதிகாலை 5:00 – 5:30) எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. சிலர் இரவில் 3:00௦௦ மணிக்கு நீராடுவர். இது கூடாது.