உள்ளூர் செய்திகள்

லாபமோ லாபம்

●  தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர். தீபலட்சுமியாக திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம்.
●  அமிர்தசரஸ் பொற்கோயிலில், சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சி.
●  உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் இருப்பர். இதனால் கால்நடைவளர்ப்பு, விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.
●  ராவணவதம் முடித்த ராமன் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பிய நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சீதாராமரை வரவேற்கும் விதத்தில் வீடெங்கும்  தீபமேற்றி வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !