ஆல்கொண்ட மால்
ADDED :3300 days ago
கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் உள்ளது பெதப்பம்பட்டி, இங்குள்ள ஆல்கொண்ட மலைக்கோயிலில், ஒரு புற்றின் மத்தியில் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார் பெருமாள். ஆலம் உண்ட சிவனின் வடிவில் இருப்பதால் இவரை ‘ஆல்கொண்ட மால்’ என்றழைக்கின்றனர். இங்கு வந்து வழிபட்டால் பசு முதலான கால்நடைச் செல்வமும் அவற்றின் மூலம் பால் வளமும் பெருகும்; வீட்டிலுள்ள கால்நடைகள் பிணிகளின்றி வளரும் என்பது நம்பிக்கை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை கால்நடைக் கோயில் என்றே அழைக்கிறார்கள்.