உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு பவுர்ணமி அன்னாபிஷேகம்

பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு பவுர்ணமி அன்னாபிஷேகம்

செஞ்சி: பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசிமாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்துள்ள பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோகிலாம்பாள், கோட்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், கோகிலாம்பாளுக்கு காய்கனி அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !