உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலவன் தரிசனம்

வேலவன் தரிசனம்

முருகன் அவதரித்த நன்னாளான வைகாசி விசாகம். அன்றைய தினம் முழுவதும் முருக சிந்தனையோடு இருப்பது வளம்சேர்க்கும். பெருமைமிகு இந்த நாளில் முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களை தரிசனம் செய்தால் நம் பகைகள் யாவும் தொலைந்துவிடும். வைகாசி விசாகத்தன்று தரிசிப்பதற்கான சில சிறப்புத் தலங்கள் பற்றி அறியப்படுகிறது. சென்னிமலை: ஈரோடு  திருப்பூர் வழியில் ஈங்கூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். குன்றமர்ந்த முருகப்பெருமானுக்கு சிகரமாக விளங்கும் சென்னிமலை சுமார் 1500 படிகளைக் கொண்டுள்ளது. மலையேறும்போது இடும்பனையும் புளியபடி பிள்ளையாரையும் தரிசிக்கலாம். இங்கு கந்தப்பெருமாள் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். பிராகாரத்தில் வள்ளி. தெய்வானையை தரிசிக்கலாம். சித்தர் சமாதியையும் பழநி போகர் சன்னிதிக்குச் செல்வதாகச் சொல்லப்படும் குகையையும் காணலாம். சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என கந்தசஷ்டி கவசத்தில் குறிக்கப்படுபவர் இத்தல முருகனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !