நடுபழநி கோயில்
ADDED :3281 days ago
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ள தலம். சென்னையிலுள்ள வடபழனிக்கும் திண்டுக்கல் அருகேயுள்ள பழனிக்கும் இடையே அமைந்திருப்பதால் இது நடுபழநி என்ற நாமத்துடன் விளங்குகிறது. என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார். கருவறையில் முருகப் பெருமான் பழனிமுருகனைப்போன்று ஒரு திருமுகமும் இரண்டு கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். வலக்கையில் தண்டம் தாங்கி, இடக்கையினை இடுப்பில் ஊன்றி தரிசனம் தருகிறார். பழனிக்குச் செல்ல இயலாதவர்கள் இவரை வழிபட்டுப் பயன்பெறலாம் என்பது ஐதீகம்.