அச்சன்கோவில் ஆபரணப் பெட்டிக்கு தென்காசி கோவிலில் வரவேற்பு!
ADDED :5116 days ago
திருநெல்வேலி : தென்காசி வந்த அச்சன் கோவில் அய்யப்பன் திரு ஆபரணப் பெட்டிக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும், சபரிமலை சீசனில் உற்சவ திருவிழா நடக்கிறது. அச்சன்கோவில் உற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவில் அய்யப்பன், கருப்பனுக்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். ஆபரணங்கள் அடங்கிய பெட்டி, கேரளா புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆபரணப் பெட்டி போலீஸ் பாதுகாப்புடன், அச்சன் கோவில் அய்யப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆபரணப் பெட்டி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, நேற்று பிற்பகல் வந்தது. தென்காசி கோவில் வாசலில், அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.