உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!

திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!

நாகப்பட்டினம் : காரைக்கால் அடுத்த திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்களின் வசதியினை கருத்திற்கொண்டு, 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், பொறையார், கடலூர், புதுச்சேரி, பட்டுக்கோட்டை, நன்னிலம், வேதாரண்யம், திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து இரவு, பகல் முழுவதும் சிறப்பு பஸ்கள் திருள்ளாருக்கு இயக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !