மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2808 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2808 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2808 days ago
திருப்பதி : ’திருமலையில், இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது’ என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் கூறியதாவது: திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில், மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும்.ஆங்கில புத்தாண்டிற்கு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருவர். அதனால், அவர்களுக்காக சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஆந்திர அறநிலையத்துறை, ’ஆங்கில புத்தாண்டின் போது, கோவில்களில் எவ்வித அலங்காரங்களும் செய்யக் கூடாது’ என, உத்தரவிட்டுள்ளது. அதனால், திருமலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஏதும் நடக்காது. வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
2808 days ago
2808 days ago
2808 days ago