உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முள் படுக்கையில் அமர்ந்து பெண் சாமியார் அருள்வாக்கு

முள் படுக்கையில் அமர்ந்து பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம் : திருப்புவனம் லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி பிறப்பை முன்னிட்டு முள் படுக்கையில் அமர்ந்து பெண் சாமியார் அருள்வாக்கு வழங்கினார். திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில்நாகராணி என்ற பெண் சாமியார் முள் படுக்கையில் தவமிருந்து அருள்வாக்கு வழங்கும் வைபவம் மார்கழியில் நடைபெறுவது வழக்கம், கோயில் வளாகம் முன் ஏழு அடி உயரத்தில் 4அடி அகலத்தில் உடை முள், இலந்தை முள், இலைகற்றாழை முள் உள்ளிட்ட 24 வகை முட்களை கொண்டு படுக்கை அமைத்துள்ளனர். காலை 10:00 மணிக்கு நாகராணி விநாயகரை வழிபட்ட பின் பக்தர்கள் புடை சூழ பூங்காவனத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்புபூஜைகள் செய்தார். பின் பக்தர்களின் பக்தி கரகோஷத்திற்கு நடுவே முள் படுக்கையில் ஏறி அமர்ந்து 2 மணி நேரம் தவம் செய்த பின் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !