உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தாமணி கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு

சிந்தாமணி கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு

விழுப்புரம்: சிந்தாமணி கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில், மகா சிவராத்திரி நான்குகால பூஜை வழிபாடுகள், இன்று நடக்கிறது. விழாவை யொட்டி, இன்று ( 13ம் தேதி ) மாலை 5:00 மணிக்கு முதல்கால பூஜை, பிரதோஷ பூஜைகள், 6:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், இரவு 9:00 மணிக்கு மேடை நாடகம், 10:00 மணிக்கு இரண்டாம் காலபூஜை, நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, மறுநாள் காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !