அரியலூரில் சோழர் காலத்து ஐம்பொன் சிலை கொள்ளை
ADDED :2803 days ago
அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அம்பாப்பூரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில், 10 கிலோ எடை மற்றும் 1.5 அடி உயரமுள்ள வீரபத்திரர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு, இதே பகுதியில் உள்ள சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.