உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழைய தேர்கள் கண்காட்சிக்கு வைக்க முடிவு

பழைய தேர்கள் கண்காட்சிக்கு வைக்க முடிவு

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் - அழகிரிநாதர் கோவில்களின் பழைய தேர்களை, கண்காட்சிக்கு வைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.சேலம், சுகவனேஸ்வர் கோவில் மற்றும் கோட்டை அழகிரிநாதர் கோவிலின் பழைய தேர்கள் பழுதானதால், புதிய தேர்கள் செய்யப்பட்டுள்ளன. விழாக்களில் இனி, புதிய தேர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பழைய தேர்கள், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது:தொழில்நுட்பம் வளர்ச்சி இல்லாத பழங்காலத்தில், முன்னோர், துல்லியமாக வடிவமைத்த தேர்கள் இவை. இவற்றின் கலைநயத்தை, வருங்கால சந்ததியினர் பார்க்க வேண்டும் என்பதால், கண்காட்சிக்கு வைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி கோரி, சென்னை, தலைமை அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !