மதுரையில் உலக நன்மைக்காக மகா ருத்ர யக்ஞம்
ADDED :2737 days ago
மதுரை: உலக நன்மை வேண்டி மதுரை எஸ்.எஸ்.,காலனி பிராமண கல்யாண மகாலில் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. பிராமண கல்யாண மகால் டிரஸ்ச்ட், தமிழ்நாடு பிராமணர் சங்கம், மகாருத்ர சமிதி சார்பில் நிகழ்ச்சி நடந்தது. மகால் டிரஸ்ட் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். ருத்ர யக்ஞ கமிட்டி துணை தலைவர் ஜெகநாதஅய்யங்கார் முன்னிலை வகித்தார். கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பிராமணசங்க மாவட்ட தலைவர் (பொறுப்பு) விஸ்வநாதன், பொது செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 150 வேதவிற்பன்னர்கள் பங்கேற்று குரு வந்தனம், சங்கல்பம், கலச ஸ்தாபன வேள்விகள் நடத்தினர்.