உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

ஊத்துக்கோட்டை முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

ஊத்துக்கோட்டை: கிருத்திகை விழாவையொட்டி, முருகப் பெருமான் கோவில்களில் நடந்த விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னதி உள்ளது. கிருத்திகை விழாவையொட்டி, நேற்று, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதேபோல், சுருட்டப்பள்ளி, சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், கிருத்திகை விழாவை ஒட்டி, நேற்று, பெரும்பாலான முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை, பஜார் பகுதியில் உள்ள நாகவல்லியம்மன் கோவிலில் வளாகத்தில் உள்ள, முருகப் பெருமான் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !