சாயல்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :2934 days ago
சாயல்குடி, சாயல்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. மாலையில் விளக்கு பூஜையும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேக, ஆராதனையும் நடந்தது. முளைப்பாரிக்கு முன்பு கும்மி, கோலாட்டம், ஓயிலாட்டம் ஆடினர். பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று மாலை பாரி ஊர்வலம் நடந்தது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.