பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2759 days ago
மோகனூர்: பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில் பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம், கணபதி ?ஹாமத்துடன் கும்பாபி?ஷக விழா துவங்கியது. தொடர்ந்து, நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மூலமந்திர ஹோமம், கடம் புறப்பாடு, 6:00 மணிக்கு, விநாயகர், பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.