நரசிம்ம ஜெயந்தி: உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3023 days ago
கோவை: உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், மூலவர்க்கு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்த்தர்கள் வழிபாட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.