திரவுபதியம்மன் கோவில் திருவிழா
ADDED :2757 days ago
கிருஷ்ணகிரி: பர்கூரில், திரவுபதியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பர்கூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், மகா பாரத திருவிழா, கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் துவங்கி, வரும், மே, 2 வரை, இந்த விழா நடக்கிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், பகலில், மகா பாரத சொற்பொழிவும், இரவில், மகா பாரத நாடகமும் நடந்து வருகிறது. நேற்று காலை, 18 அடி உயரம் கொண்ட தபசு மரத்தின் கீழ், சிறப்பு பூஜைகள் செய்து, அர்ஜுனன் வேடம் அணிந்தவர், தேவாரம் பாடியபடி உச்சிக்கு சென்றார். பின், அங்கிருந்து பூஜைப் பொருட்களை, பொதுமக்களை நோக்கி, வீசியபின் இறங்கினார். அப்பொருட்களை, வீட்டில் வைத்தால், நோய் வராது என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.