உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கோட்டை மாரியம்மன்

சேலத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கோட்டை மாரியம்மன்

சேலம்: கோட்டை மாரியம்மன், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். வைகாசி பிறப்பை யொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (மே15)ல்
அதிகாலை முதலே, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்ய ப்பட்டது. அதேபோல், வின்சென்ட் சாலையிலுள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், விசேஷ பூஜை, அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.

கோட்டை பெருமாள், சுகவனேஸ்வரர், சின்னக்கடை வீதி கன்னிகா பரமேஸ்வரி, செவ்வாய்ப் பேட்டை காளியம்மன், மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

புண்யகால பூஜை: ஸ்ரீவிஷ்ணுபதி கமிட்டி சார்பில், கன்னங்குறிச்சி, உலகளந்த பெருமாள் கோவிலில், மூன்று தமிழ்மாதப்பிறப்புக்கு ஒருமுறை வரும் விஷ்ணுபதி புண்யகாலபூஜை, நேற்று (மே15)ல் நடந்தது. காலை, சிறப்பு பூஜை செய்து, யாகத்தில், கலசங்களிலி ருந்த புனிதநீரை, மூலவர் பெருமாள், உற்சவர் விஸ்வரூப தசாவதார பெருமாள்களுக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரித்த சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள், ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர்.

3 முக்கிய விசேஷங்கள்: வைகாசி பிறப்பு, அமாவாசை, கிருத்திகை ஆகிய மூன்று முக்கிய விசேஷசங்கள், முருகனுக்கு மிகவும் உகந்த செவ்வாயன்று, ஒரே நாளில் வந்தது. இதனால், சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று (மே 15)ல் காலையிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். மதியம், 12:00 மணிக்கு, மூலவர் கந்தசாமிக்கு, 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம்

செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், கந்தசாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !