கோவை மசராயன் கோவில் உற்சவத் திருவிழா
ADDED :2652 days ago
கோவை:கோவை பாலக்காடு ரோடு, சுகுணாபுரம் - பிள்ளையார்புரம் ரோட்டில் அமைந்துள்ளது, கானியப்ப மசராயன் கோவில். 200 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவில் ஆண்டுத் திருவிழா நேற்று நடந்தது.காலை, 9:00க்கு, பசும்பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றால், சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பொங்கல் படைத்தல், அலங்கார தீபாராதனை மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடந்தன. மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது.