ஏழு கடல்
ADDED :2625 days ago
சோமசுந்தரக் கடவுள் சீரும் சிறப்புமாய் மதுரையை ஆண்டு வந்தார். அரசி காஞ்சன மாலைக்கு கடலாடும் விருப்பம் உண்டாயிற்று. அதை தன் மகள் தடாதகையிடம் தெரிவித்தார். தடாதகை ஈசனிடம் கூறினார். இறைவன் கருணை கூர்ந்தார். ""ஒரு கடல் என்ன? ஏழு கடல்களையும் இங்கே வரவழைக்கிறேன்! என்றார். அவ்வாறே எழுகடல்களும் பெருமுழக்கத்துடன் மதுரைக்குள் நுழைந்தன. மக்கள் அஞ்சி நடுங்கினர். அது கண்ட இறைவன் ஏழு கடல்களையும் ஒரு குளத்திற்குள் அடக்கினார்.