உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை!

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை!

ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை கரைத்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கின் முன் அத்தீர்த்தத்தை வைக்க வேண்டும். அம்மன் படத்துக்கு பூக்கள் தூவி 108 போற்றி சொல்லி வழிபட வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து, புண்ணிய நதிகளை மனதில் தியானித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீர்த்தத்தை கால் மிதி படாமல் செடி, மரத்தில் ஊற்ற வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குறையொன்றும் வராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !