உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்­கோ­வி­லுார் கோவி­லில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருக்­கோ­வி­லுார் கோவி­லில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருக்கோவிலுார்: திருக்­கோ­வி­லுார், உல­க­ளந்த பெரு­மாள் கோவி­லில் நடை­பெற்று வரும் வேணு­கோ­பா­லன் பிரம்­மோற்­சவ விழா மற்­றும் கிருஷ்­ண­ ஜெ­யந்­தியை முன்­னிட்டு நேறற்று சிறப்பு பூஜை நடந்­தது. உல­க­ளந்த பெரு­மாள் கோவி­லில் வெணு­கோ­பா­லன் பிரம்­மோத்­சவ விழா கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வரு­கிறது. முக்­கிய நிகழ்ச்­சி­யாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்­டா­டப்­பட்­டது. காலை 7:30 மணிக்கு, பாமா, ருக்­மணி சமேத ராஜ­கோ­பா­லன் சிறப்பு அலங்­கா­ரத்­தில் புறப்­பா­டாகி ஜீயர் மண்­ட­பத்­தில் எழுந்­த­ரு­ளி­னார். அங்கு சாற்­று­மறை, மண்­ட­க­படி நடந்­தது. சுவாமி ஆஸ்­தனம் எழுந்­த­ரு­ளி­ய­வு­டன், பகல் 11:00 மணிக்கு, மகா­சாந்தி ஹோமம், திரு­மஞ்­ச­னம், சேவை­சாற்­று­மறை நடந்­தது. மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி புதேவி சமேத தேக­ளீ­ச­பெ­ரு­மாள், ஆளிலை கண்­ண­ணு­டன் எழுந்­த­ருளி, கொடி மரத்­தில், ஜீயர் சுவா­மி­கள் சங்­கு­பால் அர்க்­யம் (பால் ஊட்­டு­தல்) வைப­வம் நடந்­தது.

இரவு 8:00 மணிக்கு, ருக்­மணி, சத்­ய­பாமா சமேத ராஜ­கோ­பா­லன் புஷ்ப விமா­னத்­தில் வான வேடிக்­கை­யு­டன் வீதி­யுலா நடந்­தது. ஜீயர் ஸ்ரீநி­வாச ராமா­னு­ஜாச்­சா­ரி­யர் தலை­மை­யில் நடந்த இவ்­வி­ழா­வில் ஏரா­ள­மான பக்­தர்­கள் கலந்து கொண்­ட­னர். விழுப்புரம்:  வி.மரு­துார் பஜனை கோவில் வீதி­யில் அமைந்­துள்ள ஸ்ரீ சந்­தான வேணு­கோ­பால் கோவி­லில் கிருஷ்ண ஜெயந்­தியை முன்­னிட்டு நேற்று காலை 6.00 மணிக்கு மூல­வ­ருக்கு சிறப்பு
அபி­ஷே­கம் மற்­றும் தீபா­ரா­தனை நடந்­தது. இரவு சுவாமி வீதி­யுலா மற்­றும் உறி­யடி உற்­ச­வம் நடந்­தது.

கள்ளக்குறிச்சி: தில்லை கோவிந்­த­ராஜ பெரு­மாள் கோவில் கிருஷ்ண ஜெயந்­தி­யை­யொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, ராமர், லஷ்­ம­ணர், சீதை, ஆஞ்­ச­நே­யர் சுவா­மி­க­ளுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்­தது. தொட­ர்ந்து மூல­வர், உற்­ச­வர் கிருஷ்­ண­னுக்கு சிறப்பு அபி­ஷே­கம் செய்து, அலங்­க­ரித்து பூஜை நட­ந் தது.  கிருஷ்ண ஜெயந்தி சிறப்­பு­கள் குறித்து தேசிக பட்­டர் பக்­தர்­க­ளுக்கு விளக்­கி­னார். இன்று காலை 9:00 மணிக்கு பெரு­மாள் கோவில் மற்­றும் தேரோ­டும் வீதி­களில் உறி­யடி உற்­ச­வம் நடக்­கிறது. இதே­போல் கள்­ளக்­கு­றிச்சி சிதம்­ப­ரேஸ்­வ­ரர் மற்­றும் சித்­தேரி தெரு நவ­நீ­த­கி­ருஷ்­ணன் கோவில்­களில் கிருஷ்ண ஜெயந்தி உற்­ச­வம் நடந்­தது. திண்டிவனம்: திண்­டி­வ­னம், லட்­சுமி நர­சிம்­மர் சுவாமி கோவி­லில், கிருஷ்ண ஜெயந்­தியை முன்­னிட்டு, கிருஷ்­ண­ருக்கு சிறப்பு அபிேஷ­கம் மற்­றும் மகா தீபா­ரா­தனை நடந்­தது. ஏரா­ள­மான பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­த­னர். கிருஷ்ண ஜெயந்­தியை முன்­னிட்டு பக்­தர் ஒரு­வர், கிருஷ்­ணர் வேட­ம­ணிந்து முக்­கிய வீதி­கள் வழி­யாக சென்று பக்­தர்­க­ளுக்கு ஆசி வழங்­கி­னார்.

கண்­டாச்­சி­பு­ரம்: கீழ்­வாலை ஸ்ரீநி­வாச பெரு­மாள் கோவி­லில், கிருஷ்ண ஜெயந்­தி­யை­யொட்டி நேற்று காலை 7:00 மணி முதல் சிறப்பு அபி­ஷே­கம் மற்­றும் தீபா­ரா­தனை நடந்­தது. மாலை ஒதி­யத்­துார் ஹரி பஜ­னைக் குழு­வி­னர் வீதி­யுலா மற்­றும் உறி­யடி உற்­ச­வ­மும், இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநி­வாச பெரு­மாள் சுவா­மிக்கு திருக்­கல்­யா­ணம் மற்­றும் வீதி­யுலா நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !