உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்ணில் என்னென்ன இருக்கிறது

எண்ணில் என்னென்ன இருக்கிறது

ஒன்று : பிரம்மம் யாவுமாய் யாண்டும் ஒன்றிருப்பது
இரண்டு : தாரகப் பிரம்மம் இலங்குவது இயக்குவது
மூன்று : மூன்றுவிதமானுட சக்தி வெளிப்பாடுகள்
தமோ குணம் : அசுரத்தன்மை தீய வடிவில் சக்தியை படச் செய்வது
ரஜோ குணம் : தேவத் தன்மை, நல்லதான வழிகளில் கர்வம் கலந்து சக்தியை வெளிப்படச் செய்வது
சத்வ குணம் : இரண்டையும் கட்டுப்படுத்தி அடக்கியாண்டு சமநிலையில் சக்தியினை அமைதியாக வெளிப்படுத்துவது.

பூஜைகள் மூன்று

நித்யம் தினமும் நைநித்யம் சிறப்பு வழிபாடு காமியம் ஒன்றை விரும்பிச் செய்யும் பூசனை முறை. முக்கண் ஈசன் மூவிலை வேல் திரிசூலம் ஏந்திய சிவனார் வில் நாண் அம்பு கொண்டு வாயு திருமால் அக்கிக் கணைகளால் முப்புரம் எரித்தார். தமோ, ரஜோ, சத்வ என முக்குணம் ஆகியும் அவை அணிந்தும் ஆனவர்

நான்கு: ஈசன் முகம் நான்கு வேதங்கள் நான்கு ரிக், யஜர், சாம, அதர்வண பிறப்புகள் நான்கு சமயக்குறவர்கள் நால்வர். திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு முருகக்கடவுள் அம்சம், திருநாவுக்கரசர் - தேவாரம் வாகீசர் திருமுனிகள் அம்சம், சுந்தர மூர்த்திப் பெருமான் - திருப்பாட்டு சிவாம்சம், மாணிக்கவாசகப் பெருமான் - திருவாசகம் நந்திதேவர் அம்சம்
 
பிரம்மாவின் மானச புத்திரர்கள்

            1.         சனத்குமாரர்
            2.         சனகர்
            3.         சனந்தனர்
            4.         சனாதனர்

ஐந்து: இறையுருவின் தலையில் அரவின்தலை ஐந்து, புலன்கள் ஐந்து, ஆதார பிரபஞ்சப் பொருட்கள் ஐந்து, பூசனைகளில் போற்றுதற்குரிய முக்கிய கலவைப்பொருள் பஞ்சகவ்யம், முக்கிய வாயுக்கள் ஐந்து உடலின் முக்கிய கோசங்கள் ஐந்து இன்னும் எத்தனை எத்தனையோ விரிக்க இடம் போதாது.

ஆறு: வேதத்தின் அங்கங்கள் ஆறு

            1.         சிக்கை
            2.         கற்ப சூத்திரம்
            3.         வியாகரணம்
            4.         நிறுத்தம்
            5.         சாந்தோவிசிதி
            6.         சோதிடம்

முகங்கள் ஆறு. பூ நுகர் வண்டின் கால்கள் ஆறு. நா நுகர் சுவைகள் ஆறு. யோக வழி ஆதாரங்கள் ஆறு இன்னும் ஆன்றோர்கள் கூறுவர்

திருமுருகன் முகங்கள் ஆறு
நா நுகர் சுவைகள் ஆறு

            1.         இனிப்பு
            2.         கசப்பு
            3.         புளிப்பு
            4.         துவர்ப்பு
            5.         உரைப்பு
            6.         கார்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !