உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 25ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மகாராஜபுரம், ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில், புதிதாக அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, நாளை காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி நடக்கிறது. மறுநாள் ( 24ம் தேதி) அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது. தொடர்ந்து 25ம் தேதி காலை 8:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !