மேலும் செய்திகள்
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
2465 days ago
நால்வர் இசைத்தமிழ் ஆராதனை அவிநாசி கோவிலில் கோலாகலம்
2465 days ago
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
2465 days ago
குணத்தில் குன்றாக நிமிர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! சனி, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன் தரும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. சனிபகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இது மிக சிறப்பான காலமாக அமையும். முன்னேற்றம் காண்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் பொருள் நஷ்டம், மனசஞ்சலத்தை ஏற்படுத்தினாலும், அவரது 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து சாதனை புரிவீர்கள். அவர் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவரால் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரது 7 மற்றும் 9ம் இடத்துப் பார்வைகள் மூலம் நற்பலன் அளிக்கும். ராகு உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுத்திருப்பார். காரிய அனுகூலத்தைக் கொடுத்திருப்பார். ராகு பிப்.13ல் 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மை தர மாட்டார். இதனால் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.கேதுவால் பொருள் விரயம், உடல் உபாதை ஏற்பட்டிருக்கும். பிப்.13ல் கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான தனுசு ராசிக்கு போகிறார். அவர் நல்ல வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கொட்டும். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.எந்த ஒரு முயற்சியும் வெற்றிகரமாக முடியும். பெரியோர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் எப்போதும் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். புதுவீடு கட்டுதல், நிலம் வாங்குதல் நடந்தேறும். ஆண்டின் தொடக்கத்தில் வீண்செலவு ஏற்படலாம். எனவே சிக்கனமாக இருக்கவும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். மார்ச்13 முதல் மே 19 வரை கணவன், மனைவி இடையே பிரச்னை மறைந்து அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வீண்விரயம் மறைந்து சேமிப்பு அதிகரிக்கும். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் வாழ்க்கையில் வளம் காணலாம். ஆனால் மே20ல் இருந்து அக்.26 வரை சுபநிகழ்ச்சிகள் தாமதப்படலாம். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். மார்ச்13 முதல் மே19 வரை பணியிடத்தில் செல்வாக்கு உயரும். விரும்பிய பணிமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். டிச.16க்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொருளாதாரம் சிறக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் சிறப்படையும். உங்கள் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருந்த பெண்கள் மே மாதத்திற்கு பிறகு சிரமத்திற்கும் காரணமாக இருப்பர். எனவே ஆண்டின் பிற்பகுதியில் அவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கலாம். புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டாம். அக்.26க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் தரும். கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தொழில்ரீதியாக வெளியூர், வெளிநாடு சென்று வெற்றியுடன் திரும்புவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆனால் மார்ச்13க்கு பிறகு எதிர்பார்த்த பாராட்டு, விருது கிடைக்கும்.மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் குருவின் பார்வை பலத்தால் தரத்தேர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மார்ச் 13க்கு பிறகு சிலர் தேர்வில் ரேங்க் பட்டியலில் இடம் பெறுவர்.விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், கோதுமை, மஞ்சள் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைக் காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கடந்த காலத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. மே19ல் இருந்து அக் 26 வரை பணியில் பொறுப்பு அதிகரிக்கும். வெளியில் பெருமையாகப் பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மே மாதத்துக்கு பிறகு வயிறு தொடர்பான உபாதை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.பரிகாரம்:* வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை தரிசனம்* ஏகாதசியன்று விரதமிருந்து ரங்கநாதர் வழிபாடு* திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனைபாடுங்க! பாடுங்கஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவின் அணையான் கோலமாமணி ஆரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில்நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே.கொண்டல் வண்ணனை கோவலனாய்வெண்ணெய்உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானைஅண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
2465 days ago
2465 days ago
2465 days ago