உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தர்மபுரி அம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தர்மபுரி: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 5ல்) நடந்த பால்குட ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ள மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, கடந்த மார்ச், 2ல், காலை, 8:00 மணிக்கு, மகா கணபதி, சுப்பிரமணியர் மற்றும் அம்பாள் ஹோமம் நடந்தது.

மறுநாள் காலை, 5:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், 9:00 மணிக்கு குண்டம் விழா நடந்தது. நேற்று (மார்ச்., 5ல்) காலை, 11:00 மணிக்கு நடந்த பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, 10:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இன்று (மார்ச்., 6ல்) நள்ளிரவு, 1:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11:00 மணிக்கு, மயானக்கொள்ளை நடக்கிறது. நாளை, பல்லக்கு உற்சவம், நாளை மறுநாள் (மார்ச்., 7ல்) கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !