கிருஷ்ணகிரியில் மயான கொள்ளை திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2451 days ago
கிருஷ்ணகிரி: அங்காளம்மன் மயான கொள்ளை விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழா, நேற்று (மார்ச்., 5ல்) நடந்தது. முன்னதாக, முகவெட்டு எடுத்து, ஆற்றங்கரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முதுகில் அலகு குத்தியபடி, உரலை இழுத்தல், தேரை இழுத்தல், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 3:30 மணிக்கு, கோவிலில் இருந்து, அம்மன் பூத வாகனத்தில், தென்பெண்ணை ஆற்றை நோக்கி மயான கொள்ளைக்கு புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், தென்பெண்ணை ஆற்றில் நிறுத்தப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.