உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி சிவராத்திரியில் 1,008 சிவலிங்க பூஜை

கொடுமுடி சிவராத்திரியில் 1,008 சிவலிங்க பூஜை

கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) இரவு, 12:00 மணி முதல், 1:00 மணி வரை, மஹா சிவலிங்க பூஜை நடந்தது. கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள், கோவில் அர்ச்சகர்கள் வழிகாட்டுதலுடன் நடந்தது.

இதில், கொடுமுடி, சாலைப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். அதேபோல, சிவகிரி வேலாயுதசுவாமி கோவிலில், சிவகிரி ஆதீனம் சிவசமய பண்டித குரு சுவாமிகள் தலைமையில், 1,008 சிவலிங்க பூஜை நடந்தது.

* அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், கீழ்வாணி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஆப்பக்கூடல் மகளீஸ்வரர் கோவில் உட்பட, சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில், சிவராத்திரியை யொட்டி, நான்கு கால பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !