பரமக்குடி முத்தாலம்மன் பங்குனித்திருவிழா
ADDED :2713 days ago
பரமக்குடி: பரமக்குடியில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின்தீப தேரோட்டம் மார்ச் 21 ல் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. முத்தாலம்மன் கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் மார்ச்13 ல் துவங்கிய நிலையில், தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வருகிறார். நான்காம் நாளான இன்று வண்டிமாகாளி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து மார்ச் 23 காலை பால்குடம் ஊர்வலம் நடக்கும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.