உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களுக்கு முன்மாதிரி

பெண்களுக்கு முன்மாதிரி

மதீனாவில் உம்மு வரகா என்னும் பெண்மணி வசித்தார். அவர் இரவு பகலாக குர்ஆன் ஓதுவார். அதிலுள்ளவற்றை எளிதாகப் புரிந்து கொள்வார். நபிகள் நாயகம் நடத்திய இறைப் போராட்டத்தில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என
உம்மு நினைத்தார்.

“நீங்கள் போருக்குச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதில் பங்கேற்றால் தியாகம் புரிந்தவள் ஆவேன்” என்றார். “வீட்டிலேயே இரு. இறைவன் உனக்கு தியாகம் செய்யும் வாய்ப்பை வழங்குவார்” என்றார். மரணம் கண்டு அஞ்சாதவரான உம்முவின் வீட்டில் இரு அடிமைகள் இருந்தனர். தன் காலம் முடிந்ததும் அவர்கள் சுதந்திரம் அடைவர் என உம்மு சொல்லியிருந்தார். ஆனால் உம்முவைக் கொன்றால் விடுதலை கிடைக்குமே என்ற சிந்தனை அவர்களுக்குத் தோன்றியது. உடனடியாக செயல்படுத்தி விட்டு தப்பித்தனர்.  விஷயம் அறிந்த மன்னர் உமர், அடிமைகளை கண்டுபிடித்து மரண தண்டனை அளித்தான். “வீட்டிலேயே இரு. இறைவன் உனக்கு தியாக வாழ்வை வழங்குவார்” என்று நபிகள் சொன்ன விஷயம், இங்கு உண்மையாகி போனது.  இறைத்தொண்டரான உம்மு வரகா பெண்களுக்கு முன்மாதிரியாக கருதப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !