உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: வெள்ளைப் பணியாரம்

பிரசாதம் இது பிரமாதம்: வெள்ளைப் பணியாரம்

என்ன தேவை

அரிசி        –    400 கிராம்
உளுந்தம் பருப்பு     –    50 கிராம்
உப்பு         –    1 டீஸ்பூன்
எண்ணெய்         –    1/4 கிலோ

எப்படி செய்வது: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதிகம் காய்ந்து விடாமல் மிதமான தீயில் கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும். பணியாரம் மேலே எழும்பி வந்தவுடன் திருப்பி விட்டு உடனே எடுத்தால் வெள்ளைப் பணியாரம் ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !