உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ஆலங்குடி சுவாமிகளின் மகோத்சவ விழா

சென்னை ஆலங்குடி சுவாமிகளின் மகோத்சவ விழா

சென்னை: ஆலங்குடி சுவாமிகளின், 84வது ஆராதனை மஹோத்ஸவ விழா, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டானில், மே, 10ம் தேதி துவங்குகிறது.ஆலங்குடி பெரியவர் என
அழைக்கப்பட்ட, சுயம்பிரகாச சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா, காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அருளாணைப்படி, ஆண்டுதோறும், திருவாரூர் மாவட்டம், முடிகொண்டானில் உள்ள ஆலங்குடி சுவாமிகளின் நினைவிடத்தில், ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா டிரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சுவாமிகளின், 84வது ஆராதனை மஹோத்ஸவ விழா, மே, 10ல் துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது.விழாவில், தினமும் காலையில், பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அஷ்டபதி பஜனை ஆகியவை நடக்க உள்ளன.மாலையில், பாகவத உபன்யாசம் நடக்கிறது. மே, 17ல், சுவாமிகளின் உற்சவ மூர்த்தி வீதியுலாயுடன், விழா நிறைவடைகிறது.விழாவில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், டிரஸ்ட் செயலர், வி.ரகுபதி அய்யரை, 04366 - 230142, 230633 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !