மாமல்லபுரம் பிரம்மோற்சவ விழா ஏப்., 12ல் துவக்கம்
ADDED :2393 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஏப்., 12 - 22ல், பிரம்மோற் சவம் நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவிலாக விளங்குகிறது.
ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பிற சுவாமிகள் வீற்று, பக்தர்கள் வழிபடு கின்றனர். நிலம் சார்ந்த பிரச்னைகளுக்கு, பரிகார கோவிலாக சிறப்பு பெற்றது. கோவிலின், சித்திரை பிரம்மோற்சவம், வரும், 12ல், சேனை முதல்வர் புறப்பாடுடன் துவங்குகிறது. பின், 13ல், கொடியேற்றம் என துவக்கி, 22 வரை நடக்கிறது.முக்கிய உற்சவங்களாக, 17ல் கருடசேவை, 19ல், தேர் வீதியுலா நடக்கிறது. தினம் காலை, இரவு உற்சவங்கள் நடந்து, இறுதியாக, 23 - 26ல், விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறுவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.