உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம் செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில்,
செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிரதோஷம் முன்னிட்டு, நேற்று (ஏப்., 2ல்), சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நந்திக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி, உற்சவர் சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !