திருவள்ளூர் சந்தான விநாயகர் கோவிலில் காயத்ரி யாகம்
ADDED :2414 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனியில், சந்தான விநாயகர் கோவிலில், வரும், 7ம் தேதி, ஐந்து குண்டம் அமைத்து, காயத்ரி மகா யாகம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் காயத்ரி பரிவார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த யாகத்தில், ஹரித்து வாரிலிருந்து, விசேஷமாக தயாரிக்கப்பட்ட, 108 மூலிகைகள் கொண்ட ஹோம திரவியங்களை பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே ஹோமம் செய்யலாம்.காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை இந்த யாகம் நடைபெற உள்ளது.