உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வரும், 10ம் தேதி முதல் துவங்கி, இம்மாதம், 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான, பிரம்மோற்சவ விழா, வரும், 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தினசரி, காலை, இரவு ஆகிய இரு வேளைகளில், ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவ பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வரும், 17ம் தேதி, தெய்வானை திருக்கல்யாணம், 18ம் தேதி சண்முகர் உற்சவம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும், பிரம்மோற்சவம் நடக்கும், 11 நாட்களும், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !